கோழி கூவாது

கோழி கூவாது!

பொழுது விடியட்டும்
உரிமை பற்றிப் பேசுவோம்.
அன்று,
அடுத்தவன் தின்றான்
இன்று
நம்ம ஆள் ஊதுகிறான்.
வறுமைக்கு எதிரிகள்
உரிமைக்கு நண்பர்கள்.
வக்கு அற்றதுகள்
கொடுமையின் உறவுகள்.
‘”எதற்கும் தயார்கள்
எஜமானம்’ ஆகலாம்!

சமத்துவச் சூரியன்
இங்கு
தோன்றிட மாட்டான்!
ஏனேனில்,
ஜாதி மேகங்கள்
இருட்டிடும் நீதியை!.
சட்டங்ள் உறங்குவது
காகிதச் சிறைகளில்!
சமநீதி விளம்பரங்களில்!
ஏழைக்குப் பொழுது
எப்போது விடியுமோ?

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (10-Oct-13, 9:02 am)
பார்வை : 205

மேலே