Anbu Malar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Anbu Malar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 184 |
புள்ளி | : 16 |
கண்ணீர் எழுதும் மறு ஜென்ம சாசனம்.....
======================================
எத்தனையோ
கனவுகளில்... கற்பனைகளில்
நீயும் நானும்
வாழ்ந்த காலங்கள்...
நினைத்துப் பார்க்கிறேன்
பசுமரத்தாணி போல்
நெஞ்சத்தில் பதிவுகள்...
ஒருவரை ஒருவர்
பார்க்காத நாட்களில்
உறங்க மறுத்தும்
கண்ணீர் சிந்தியும்
இடைவெளிகளுக்குப் பின்
காண்கையில்
உவகையில் களித்தும்...
உனக்கும் எனக்குமான
திருமண பேச்சுக்கள்
நம் சந்திப்பின் போதெல்லாம்
வாய் ஓயாமல் பேசியும்...
நடைபெறாத திருமணத்தை
கற்பனையில் நடத்தியும்
கனவுகளில் வாழ்ந்தும்
பிறக்காத குழந்தைகளுக்கு
பெயர் வைத்தும்
மகிழ்ச்சியில் மூழ்கி
கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
சித்திரையும் பொறந்ததடி
சின்ன புள்ள உச்சியில
ஆங்கில
உஷ்ணமும் ஏறுதடி
தணிக்க தமிழிலோர் பாட்டெழுதி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
வைகாசில
வைபோகமும் காணலடி
விலைவாசியும் ஏறுதடி
விளைநிலத்தை வீடாக்காம
விவசாயத்தை வளர்த்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
ஆனியில
ஊத காத்தும் வீசலடி
உச்சி வெயிலும் தணியலடி
ஊரோரம் மரமொன்னு நட்டு
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
ஆடிப்பட்டத்திலே
அரசியல் வெள்ளமும் ஓடுதடி
அதிலே
நல்லதொரு ஆட்சியை விதைத்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
ஆவணியில புது நாத்த
ஆடும் மயிலை ரசிக்காமல்
அதன் இறகைப் பிடுங்கும்
ஆசையில் மனிதன்...!
இயற்கையை அழிக்கும்
பாவத்திற்கு
முடிந்தவரை தேடுவோம்
பரிகாரம்.
பொட்டல் காடு எல்லாம்
விதைகள் ஊன்றி வைப்போம்;
காலி இடங்கள் எல்லாம்
மரங்கள் வளர்ப்போம்
இன்னும் சில ஆண்டுகளில்
மழைப் பொழிவு உயரும்*
தகிக்கும் வெப்பம் அதிகரிக்கும்#
உயரும் கடலோர நீர்மட்டம்^
முடிந்தவரை கடைசி
இரண்டையும்
குறைத்திட முயல்வதே
அறிவுடமை.
வருந்துவோம் திருந்துவோம்
வாழ்வளிக்கும்
இயற்கை அன்னையைப்
போற்றுவோம் பேணுவோம்
வருங்காலம் சிறந்திட.
* 7% # 3.1 டிகிரி ^ 65 செ.மீ
நன்றி: முனைவர் இராமச்சந்திரன், காலநிலை மற்றும் ஒத்துப்போதல் ஆய்வுத்துறை, அண்ணா பல்கலைக் கழகம்.
(தினகரன் – 06-12-2013, புதுச்சேரி பதிப
இன்னா என்பது
நல்ல தமிழில் கேடு
சென்னைத் தமிழில்
“என்ன” என்பதே ”இன்னா”
சொன்னாப் புரிஞ்சிக்கோங்க
நைனா..
நாய்க் கடிக்கு ஊசி போடப் போனீங்களே என்ன ஆச்சு?
ஊசிப் போட வந்த டாக்டரை நாய்க்கடி பட்ட என் பையன் கடிச்சிட்டான்
படிக்கச் சொன்னால்
பிடிக்காது
அடிக்கச் சொல்லுங்கள்
இடிக்க்ச் சொல்லுங்கள்
வரிந்து கட்டிக் கொண்டு
வந்து விடுவார்கள்
ரவுடிகள்
கெட்டவர்களின் கைப்பாவைகள்
கூலிக்குக் குற்றம் செய்யும்
கேடுகெட்ட ரவுடிகள்
நண்பர்கள் (11)

அன்புடன் ஸ்ரீ
srilanka

புவனா முத்துக்கிருஷ்ணன்
திண்டுக்கல்

Vanadhee
சென்னை

C. SHANTHI
CHENNAI
