இமைகள் மூடி மறைக்கும் என் கண்ணீர் துளிகள் 555
என்னவளே...
உரிமையோடு நான்
உன்னோடு பேசும் போதெல்லாம்...
நீ எனக்கு உரிமை
இல்லையென...
சொல்லாமல்
சொல்கிறாய்...
உன் வார்த்தையால்...
உரிமைகள் இருந்தும்
விலகி நிற்கிறேன் உன்னிடத்தில்...
உன்னைவிட்டல்ல...
நீயோ தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கிறாய்...
நீ தரும் வேதனைகள்...
என் விழியோரம் ஈரம்
கசிந்து கொண்டே...
விழிகள்
பேசினாலும்...
இமைகள் மூடி
மறைகிறது...
என் கண்ணீர்
துளிகளை...
என் முகம்
பார்த்து சொல்...
உனக்கு உரிமைகள்
இல்லையென்று...
என்னிடத்தில்
ஒருமுறை.....