சச்சின் தெண்டுல்கர் – க்ரிக்கெட் தொல்காப்பியர் !!!
சச்சின் தெண்டுல்கர் – க்ரிக்கெட் தொல்காப்பியர் !!!
சச்சின்.. இந்திய அணிக்கு ஒளிதரும் அணிகலன்
உருவில் சிறியவன் ஆனால் சாதனையின் சிகரம்
மழலைச் சிறுவர்க்கும் மனம் விரும்பும் தோழன்
வயதில் பெரியவர்க்கும் ஓர் நம்பிக்கை நாயகன்.
“பேட்”டிங்க் நுணுக்கங்கள் மூளையின் ஒவ்வொரு அணுவிலும் - நம்
நாட்டின் பெறுமைகள் இவன் ஈட்டிய ஒவ்வொரு நூறிலும்
வீசிய பந்தை மெல்லத் திசைதிருப்பி ஓட்டிடும் வல்லமை சொன்னவன்
ஏற்றியே நெஞ்சைக் குறிவைத்த வீச்சை தூற்றித் துரத்தியவன் – முன்னங்
காலிலே வீழ்ந்த பந்தை நெம்பி நிமிர்த்தி நேராக விரட்டியவன் – குறி
மாற்றியே வீசினும் வாரிச் சுழற்றி நேர்த்தியாய் வீசி அடிப்பவன்
பந்து வீச்சாளன் திகைத்து நிற்பான்.. இவன் வீழ்வானா ? என நினைப்பான்
பத்து வீரர்கள் வளைத்து நின்று வ்யூகம் அமைத்தாலும் – எங்கள் சச்சின்..
சற்று “பேட்”டின் தலை சாய்த்து பதமாக பந்தின் முதுகு வருடி – வீரரிடை
நுழைத் துருட்டி எல்லைக்கு அப்பாலே எழிலாக அனுப்பி வைப்பான்.
இவையாவும் க்ரிக்கெட் “மட்டையடி” இலக்கணங்கள் என்று சொன்னான்
அதனால்தான் நான் சொல்வேன் “சச்சின் ஒரு தொல்காப்பியன்” என்று – ஆம்
இவன் போல எவரேனும் இலக்கணத்தை சொன்னதுண்டோ ? சொல்லுங்கள்.
“சச்சின் தெண்டுல்கர்” – “க்ரிக்கெட் தொல்காப்பியன்” – சால்ப்பொருந்தும்
இலக்கனைத்தும் தொட்டவனே !! இலக்கணங்கள் படைத்தவனே !!
இளைப்பாரும் நேரமிதே... உன் நினைப்பாலே நாம் நெகிழ்வோம் !!
இருனூறு போட்டி கண்டான் !! இவன் “நூறு - நூறு” வென்றான் !!
ஒரு நூறு கோடி நெஞ்சம் உன் புகழ் ஓங்க பாடி நிற்கும்
வாழ்க !! வாழ்க !! எங்கள் சச்சின் ........
ஜ. கி. ஆதி