இமைகளை கடக்கும் கனவுகள்...!

தொல்லை

உனக்காக ஒரு கவிதைக்காக
வார்த்தைகளை நான் தேடும்...
பொழுதிலாவது கொஞ்சம்
குறுக்கும் நெடுக்குமாய்
நினைவுகளில் நடந்து...
என்னை கலைக்காமலிரேன்!

* * *

சபதம்

இரு இரு...
உன் மெளனத்தை..
என் மெளனத்தாலேயே
உடைக்கிறேன்!

* * *

கோபம்

எல்லோரையும் நேராகவும்
என்னை மட்டும் கடைக் கண்ணாலும்
நோக்கும் உன் விழிகளுக்கு
ஏனிந்த ஓர வஞ்சனை?

* * *

சந்தோசம்

எல்லோரிடமும் பேசி
என்னோடு பேசாமல் போனால்
பேசாமல் போய் விடுமா
நம் காதல்?
நீ உதடுகளுக்கு காவல் போட்டாய்
கண்களின் வழியே
கள்ளத்தனமாய் அது
எட்டிப் பார்க்கிறதே
என்னடி செய்வாய்?

* * *

தூரம்

நீயும் நானும் அருகருகே...
நம் காதலைப் பற்றிய
அதீத கற்பனையில்
நம்முள் நிறைந்த காதல்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளில் நிரம்பி ததும்ப
நெருக்கத்தில் தொலையும் காதலை
தூரங்களில் தானே ரசிக்கிறோம்?

* * *

சோர்வு

உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லத் தெரியாமல்
எத்தனை கவிதைகளைதான்
நானும் எழுதுவது?
எல்லா கவிதைகளும்
காதல் மாதிரி ஒன்றை சொல்லிவிட்டு
கவனமாய் காதலை சொல்லாமல்
விட்டு விடுகிறது!

எழுதியவர் : Dheva.S (12-Oct-13, 9:30 am)
பார்வை : 140

மேலே