எதைக் கொடுப்பாய் நீ?

என் பார்வையில் கோளாறு,
எங்கும் எதிலும் நீ.
உன் உருவம் தவிர,
தெரிவதில்லை வேறெதுவும்.

கிராமங்களைச் சூறையாடும்
கொள்ளயனைப் போல் - சிரித்து,
என்னைச் சிதைத்து,
சின்னாபின்னமாக்கிய நீ!.

பார்வையில் அமுதமும்
பிரிவில் நஞ்சும் வழங்கும்
விசித்திரப் பிறவி நீ!

நீ சிரிப்பை விதைத்தாய்,
என் புன்னகைக் கூடப் பறிபோனது.
உன் பார்வையை விதைத்தாய்,
என் கண்களும் பறிபோனது.
நச்சுத் தாவரமா நீ?

காற்றாடி நூலில் சிக்கி,
கழுத்தறுப்பட்டு உயிர் விடும்
வாகன ஒட்டியப் போல
உன் வாய் மொழியில்
மயங்கிய நான்.

பட்டு போன மரத்தில் இருந்து
உதிரும் இலைகளாய்
உன்னில் சிக்கிய நான்.

இதயமே இறுதியாக கேட்கிறேன்;
என் சிரிப்பை எனக்கு கொடு,
என் விழிகளுக்கு ஒளியை கொடு,
என் உயரைத் திரும்பக் கொடு,
எதுவும் உன்னால் முடியாதென்றால்
உன்னையாவது எனக்கு கொடு.

எழுதியவர் : த.எழிலன் (12-Oct-13, 5:13 pm)
சேர்த்தது : vellvizhe
பார்வை : 248

மேலே