இயல்பு மாறா இந்நிலை

வண்டு தன்னை நுகர்ந்து
மற்ற பூக்களிடம் சென்றாலும்
கொண்ட சிரிப்பை -
கோணாது புரிகிறது பூக்கள்

அன்றே, ஆயிரம் மாணாக்கர்
அயல்நாடு அடைந்தாலும்
இன்றும், அதே பள்ளியில்
அடுத்த மாணவனின் பயணத்துக்காக
பாதைபோடும் ஆசிரியர்

தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தாலும்
நகர்ந்து தன்னுயரம் குறைக்க நினையா
அருவி

விடியல்
இரவை வேட்டையாடி வென்றாலும்
நொடிந்து போகாது நோன்பிருந்தபடியே
நிலவு,

கோடை வெயில் தன்னை கொளுத்தினாலும்
குளிர்ந்த நிழலை மட்டுமே
தரும் மரங்கள்

மனிதமே !..
இயல்பான நிலை
மாறாது இருக்கிறதா எந்நாளும் ?..

எழுதியவர் : மதனா (12-Oct-13, 10:28 pm)
பார்வை : 53

மேலே