ஆங்கில அறிஞர் ஹேவ்லக் எல்லிஸ்
புகழ் பெற்ற ஆங்கில அறிஞரான ஹேவ்லக் எல்லிஸ் சிறு வயதில் ஒரு நாள் பள்ளியிலிருந்து தோள் பட்டைக் காயத்துடன் வீடு திரும்பினார்.
அதைப் பார்த்து பதறிப் போன அவரது தாய், "யார் உன்னை இப்படி அடித்துக் காயப்படுத்தியது?" என்று கேட்டார்.
"என் வகுப்புத் தோழன் தான்" என்றார் ஹேவ்லக் எல்லிஸ்.
"நீயும் திருப்பி அடித்தாயா?" என்று கேட்டார் தாயார்.
"இல்லை அம்மா... அப்படி செய்தால், நானுமல்லவா அவனைப்.போல் கெட்டவனாகி விடுவேன்?" என்றார் ஹேவ்லக்.