என் அகராதி

அன்பு - அடிமனதின் ஊற்று
பண்பு - பிறப்பில் உயிர்ப்பு
பாசம் - இதயத்தின் அருவி
நேசம் - நெஞ்சத்தின் வாசம்
பரிவு - உள்ளத்தின் சுரப்பு
இன்பம் - பொங்கிடும் உள்ளம்
நட்பு - சிந்தையின் சிறப்பு
துயரம் - நெஞ்சின் வலி
நெகிழ்வு - சிந்தையின் சிலிர்ப்பு
பொறாமை - இதயத்தின் வெப்பம்
கோபம் - நாளத்தின் துடிப்பு
காதல் - ஆழ்மனதின் அன்பு கலந்த விருப்பம்
- அன்பும் காமமும் கலந்த கலவை
மரணம் - பிறப்பின் இறப்பு
தமிழ் அகராதி அல்ல இது
என் அகத்தின் அகராதி !
பழனி குமார்