பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் !
கட்டெறும்பு ஒற்றுமையாய்
கரும்பினை கடித்திருக்கும் தமிழன்
காயும் சூரியன் கடவுளென
கைகூப்பி தொழுதிருக்க
கிழங்கு வந்து கிழக்கெனவும்
கிள்ளி வைத்த பூ வெனவும்
பூச்சி தின்னும் கோலமெனவும்
போட்டு வைக்கும் பண்பாடாய்
மஞ்சள் கொத்தும் இஞ்சி கொத்தும்
மங்கலமாய் கட்டி வைச்சு
புது பானை சுட்டு வைச்சு
புங்கன் இலை படலை விட்டு
காற்று வந்து கைதொழ
கச்சிதமாய் பாதை வைச்சு
வெல்லமதை விட்டு வைச்சு
வேகவைக்க பூசை வைச்சு
ஏலம் மணக்கும் எண்ணம் வைப்போம்
எட்டு திக்கும் சொல்லி வைப்போம்
பொங்குகின்ற பால் பார்த்து
புது துணியின் நூல் பார்த்து
நெய்தல் நிலமும் குறுஞ்சி நிலமும்
நீண்டு படரும் முல்லை நிலமும்
மருதம் நிலத்தில் மணம் பார்க்க
மணல் எடுக்குமாம் பாலை நிலத்தில்
ஆதி முதலாம் தமிழகத்தில் இப்போது
ஆற்றில் கிடக்கும் இப் பாலை நிலமும்
குறுஞ்சி என்பது பனிரெண்டு மணியாய்
குறுகி கொண்டாலும் மறக்க வில்லை
மருதம் என்பது மாறா உழைப்பு
மனதில் இருக்கு நெய்தல் தீரா நெருப்பு
முல்லை மட்டும் முழமாய் வாங்கி
மூட்டி வைப்போம் பொங்கலுக்கும்
நாளும் இரண்டும் சொல்லாய்
நல்ல நாளுக்கு தாவணி சட்டை
கட்டிய அத்தை பெண்ணோ
கான குயிலாய் பொங்கலோ பொங்கல்
ஆவாரம் பூவினை பறித்து கொண்டு
ஆட்டை வயிற்றுக்கு நிரம்ப மேய்த்து
தாத்தா வந்தால் தடியூன்றி இடித்து
தாம்பூலம் கொடுப்பாள் பாட்டியும்
வாண்டுகள் சக்கை கோபுரம்
வாயால் கட்டுவார் கரும்பினில்
வாழை பழத்திற்கு கொட்டையும்
வைத்திருந்தால் தப்பி பிழைத்திருக்கும்
சீரக சம்பா பொங்கலை
செரித்து போகவே உண்டுதான்
களைப்பில் கும்மிகள் கொட்டியதால்
காளைக்கு சீவுவார் கொம்பினை
மஞ்சு விரட்டினால் மணம் உண்டு
மாடு முட்டினால் மரணம் உண்டு
அஞ்சி நிற்பது எத்தனை பேர்
ஆவலில் ஏமாறும் எமதர்மன்
கணிபொறி விளையாட்டில் மென்பொருளாய்
கண்விழித்து இதை உருவாக்க
திட்டம் போட்டனர் தேர்ந்த முதலாளி
திட்டியே செய்கிறேன் வேலை என் வேலையை
பொங்கலோ பொங்கல் சொல்லியே
புறப்பட்டேன் வேலை அது வேண்டாமே
புரிந்து கொண்டால் உங்கள் வீட்டுக்கும்
பொங்கல் சாப்பிட வரிசையுடன் வருவேன்
பொங்கல் வாழ்த்தையும் சொல்லிடுவேன் !
பொங்கல் வாழ்த்தையும் சொல்லிடுவேன் !