மௌனம் கலைந்தது!

பார்வை சாதித்த
மௌனம் கலைந்தது
உந்தன் சின்ன புன்னகையில்!
வார்த்தை சாதித்த
மௌனம் கலைந்தது
உந்தன் பெயர் நான் சொல்கையில்!
மனம் மட்டுமென்ன
மௌனம் கலைந்தது
உன் முத்து பேச்சினில்!
உந்தன் முதல் சந்திப்பினில்!
மௌனம் சம்மதிக்கவில்லை!
இன்றும் சம்மதம் பெறவில்லையே!
பேசுகின்றேன்
என் நினைவோடு நான்!!

எழுதியவர் : மது (16-Oct-13, 4:28 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 170

மேலே