நான் வளர்த்த பச்சைக் கிளி
இலைபோட்டு நீர்தெளித்து
இடது ஓரத்தில் முதலில் உப்பு வைத்து
இரண்டாவதாக் கேசரி வைத்தபோது
இலை இப்போது - ரசனை விழியில் இல்லை
அது இப்போது
பருத்த பச்சைக் கிளியின்
சிகப்பு அலகிலே வைர மூக்குத்தி போட்டது போல்
பச்சைக் கிளியாய் - இலை
சிகப்பு அலகாய் - கேசரி
வைர மூக்குத்தியாய் - உப்பு...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
