ஆணென்றும் பெண்ணென்றும் இணைவது நட்பென்று 555
என் தோழியே...
நீ யாரோ நான் யாரோ
நட்பால் நாம் இணைந்தோம்...
என் வாழ்வின் சந்தோஷ
சோகங்களையும்...
உன் வாழ்வின் சந்தோஷ
சோகங்களையும்...
பகிர்ந்து கொள்கிறோம்...
கல்லூரி முடிந்து நாம்
பேருந்திற்காக காத்திருக்கும்...
பேருந்து நிலையத்தில்...
நாம் மணிகணக்கில்
பேசிக்கொண்டு இருக்கிறோம்...
நம்மை கண்டவர்களுக்கு
எத்தனை பேருக்கு தெரியும்...
நாம் நண்பர்கள் என்று...
எத்தனை பேச்சுக்கள்
நம் காதுகளில்...
நம் பெற்றோருக்கு தெரியும்
நான் நண்பர்கள் என்று...
எத்தனை பேர்
நம் பெற்றோர்களிடம்
தவறான தகவல்கள்...
ஆணும்
பெண்ணும் பழகினால்...
சமுதாயத்தில் எத்தனை
பேச்சுக்கள் எழுகிறது...
ஆணென்றும்
பெண்ணென்றும்...
தினம் இணைகிறார்கள்
நட்பென்று...
அழகிய நட்போடு
எத்தனையோ நண்பர்கள்...
தினந்தோறும் அன்பால்
நட்பால் இணைகிறார்கள்...
தோழியே நாளை
உன் கரம் பிடிக்கும்...
உன் கணவனும்...
என் கரம் பிடிக்கும்
என் மனைவியும்...
நம் நட்பினை ஏற்று
கொள்வார்களா...
என் மனைவிக்கு நல்ல
தோழி கிடைப்பாள் உன்னால்...
எனக்கு ஒரு நண்பன்
கிடைப்பான்...
உன் கணவனால்...
நீயும் நானும் நட்பானது
நாம் செய்த வரம்...
ஏற்க மறுத்தாலும் புரியவைக்க
முயற்சி செய்வோம்...
நாம் வாழும் காலம்
வரை வாழ்வோம்...
நாம் இணைந்து
அழகிய நட்போடு.....