நெகிழி !!!! (plastic)

இறைவன் படைத்த உலகில் அவனுக்குத் தெரியாமல் மனிதன் பெற்ற சாபம் “நெகிழி” !
நெகிழியின் அறிமுகம் சொல்லயியலா வியப்பில் மனிதனை ஆழ்த்திற்று !
அடைந்துவிட்டோம் என்ற பேருவகையை மனிதன்
அவன் அத்தியாவசியத்தில் கண்டான் !
காலம் மாற மாற அதன் உருவமும் குணமும் தேவைக்கேற்றாற் போல் மாறிற்று !
அதன் தேவைகளில் திளைத்த பின்பு தான்
அதன் இன்னல்களை அறிந்தான் மனிதன் !
பல அரக்கர்களையும்,அசுரர்களையும் அழித்த இதிகாசங்கள் கொண்ட நம்மால் !
அழிக்க இயலா அரக்கன் நெகிழி !!
புதையுண்டாலும் மட்காத் தன்மையுடையவன் ! எரித்தாலும்
தன் நச்சை இழக்காத் தன்மையுள்ளவன் !
அவனை அளவோடு நிறுத்திக்கொள்வதே அகிலம் காக்க ஒரே வழி !
அவசியமானால் அவனை உபயோகிக்கலாம் ஆனால் அனாவசியமாக வேண்டாம் !!
........ஆக்னல்........