அடுத்தவன் வாழ்கிறான்
எட்டி எட்டிப் பார்த்து
ஒட்டி ஒட்டிக் கேட்டு
தோண்டி தோண்டி எடுத்து
குடைந்து குடைந்து பிடித்து
அடுத்தவன் மனதை அவன்
அறியாமல் படம் பிடித்து
உலகத்திற்கு வெளியிட்டு
அவன் வெகுவாக நோக
அவனைச் சார்ந்தோர்
மிக்க வேதனையடைய
அவனின் எதிகாலம்
மோசமாகப் பாதிக்க
சேதி பரப்பினவன்
நமுட்டுச் சிரிப்பு
நலியாமல் சிரிக்க
பாரும் ஊரும்
வேடிக்கைப் பார்க்க
துன்புறுகிறான்
நல்ல மனிதன்
உலகில் நல்லவர்
வாழ இடமில்லை
நலிந்தோர் வாழ்வு
நடத்த முடியவில்லை
தீயோரும் தீமையும்
திறம்பட தீர்க்கமாக
பீடு நடை போட
என்னே உலகம் !
என்னே மக்கள் !