அந்த ஐந்து முத்தம் ....


" ஒரு பெண்ணின் உணர்ச்சியோ
கடல் , அக்கடலில் நன் கண்டெடுத்த
சில முத்துகள் இதோ முத்தங்களாய் ".........

என்னவனே ......
" போதை தரும் பார்வை என்றாய்
இதோ இமை மூடி காத்திருக்கிறது
எனது விழிகள் , கணவன் உரிமையில்
சத்தமில்லா முத்தம் தந்து
போதை ஏற்றிகொள்!! நித்தம் இந்த
பாவையை ஏந்திகொள் !!!!!.......

" மார்கழி மாதம், மாதுளைக்கனி
போன்ற என் உதட்டில்
மாமன் நீ, இதழ் புதைத்த முத்தம்
கொண்டு சுவைதுக்கொள்!!
உதட்டிற்கும் உணர்ச்சி உண்டு
என்பதை ஒத்துக்கொள் !!!!!......

" கரு மேக கூந்தல் என்றாயே, இதோ
மோக மழை பொழிகிறது
என்னவனே, உன் ஐவிரல் கோதி
எனை அணைத்து மேக உச்சியிலே
அன்பு முத்தம் தந்து விடு நித்தம் என்
நெற்றி சூட்டை தணித்து விடு !!!!...

" வசந்த காலத்தில் பூத்த பூவிதல் என்
கன்னம் !! வாசம் கண்டு அருகில்
வரும் என் கள்வனே , உன்னோடு வாழும்
காலம் வரை நாட்கள் தவறாமல்
பாசம் முத்தம் தந்து விடு!!!.... நம்
இளமைக்கு வேலியிடு !!!!!.....

" அந்தி மிதித்து அருந்ததி பார்த்து என்
கரம் பிடித்த உயிரே , முதுமை
முற்றினாலும் முகம் சுளிக்காமல்
என் கைகளுக்கு நேசம் முத்தம்
தந்து விடு !!! தமிழ் அகராதியில் அன்பு
எனும் சொல்லுக்கு நாம் என்று
முத்திரை பதித்து விடு !!!!!.............

எழுதியவர் : ப. Dhamu (11-Jan-11, 6:51 pm)
பார்வை : 613

மேலே