நீங்களும் கவிதை எழுதலாம்?
கவிதை எழுதுவதற்கு என்று தனி இலக்கணங்கள் தேவையில்லை...உங்கள் உள்ளத்தின் உணர்வுகள்தான்.........உணர்வுகளின் பிரதிபலிப்புக்கள்தான் கவிதைகள்
நீங்கள் உங்கள் புறக் கண்களில் பார்க்கும் இந்த உலகத்தை அகக் கண்கள் கொண்டு பாருங்கள்...அதயும் எழுதிவையுங்கள்......
இதோ அழகான கவிதை ரெடி....
சுடுகாட்டில்
சில பேய்கள்
எழுந்து நின்று ஆடின...
எழுச்சிகொண்டு கேட்டன
எங்கே போயின
எங்கள் பூத உடல்கள்...?
புதைத்து விட்டீர்களா...?
எரித்து விட்டீர்களா...? என்று.
அய்யோ பாவம்
அவைகளுக்குத் தெரியவில்லை
டாஸ்மாக் தண்ணீரில்
அவர்கள் உடல்கள்
அழிந்து போனதும்...
அதனால் புதைந்து போனதும்.....?
சிகரெட்நெருப்பில்
அவர்கள் உடல்கள்
சிதைந்து போனதும்
அதனால் எரிந்து போனதும்...?
எண்ணக் கொடுமையடா...?
இதுவெல்லாம் கவிதைகளா..? என்று நீங்கள் கேட்கலாம்
என்ன செய்வது? என் மனது சொன்னது
இங்கே எழுதிவைத்துவிட்டேன்..........
கவிதை என்று ஒப்புக்கொள்வதும் நிராகரிப்பதும் நீங்களோ நானோ அல்ல
அதை சொல்ல வேண்டியதும் செய்யவேண்டியதும்............காலம்