அனுபவம்
![](https://eluthu.com/images/loading.gif)
தோழா!
நீ தோள் கொடுப்பதால் தூணாகிறாய்!
நீ துவண்டு விடாதே,
நீ எதையும் எதிர் பார்க்காமல்
செய்கிறாய்,
எதிர்பார்பை நீ நினைத்தால்
உன் கடமையை மறந்து விடுகிறாய்,
கூண்டு கிளியாகஇல்லாமல்
சிறகடிக்கும் சிட்டு குருவியாக
நீ விண்ணில் பறந்துசெல்
இவ்வுலகத்தை நீ அறிவாய்,
உனது தோல்விகள்
உனக்கு கிடைக்கும்
வெற்றியின் மைல்கள்
என்பதை மறந்து விடாதே!
நீ ஒவ்வொரு முறையும்
முயற்சிக்கும் போது
உனக்குள் விதைக்கிறாய்
வெற்றியின் வித்துக்களை!
ஆசை!
உன் வாழ்க்கைக்கு
வரையப்பட்ட வரைபடம்
அதில் உன் தகுதிக்கு
தகுந்தாற்போல்
உன் தேவைகளை தேடிக்கொள்!
ஆனால் பேராசை படாதே
அது உன்னை அழித்து விடும்.
அனுபவம்............
என்றும் அன்புடன்
சேர்ந்தை_பாபு.த