ஒரு விரலாய்...மறு குரலாய...இருப்பாயடா..(தொடர்-14---அகன் )
தங்கத் தொட்டிலிட பெரு செல்வம் இல்லையாதலால்
சந்தத் தொட்டிலில் தாலாட்டுகிறேன் உறங்கடா நீ .....
கண்ணுறங்கு கண்ணுறங்கு நீ கவலையின்றி .தமிழ்ப்
பண்கள் எல்லாம் உன் தாலாட்டாய் .உறங்கடா .நீ..
இரு விழி மூடி நீ உறங்கு இன்னல் இல்லை அங்கு
கருவில் கண்ட கனவுகளை நீ மீள்பார்வை பார்.....
உறக்கம் உயிர்களின் சக்திதரு ஆய்வகம் அங்கு
மறக்காமல் பெறுவாய் பெரும் வலிமை உண்மை
யாராரோ பாடிய தாலாட்டு நான் பாடமாட்டேன்
ஆராரோ என்றிசைக்க தமிழ்ச் சொற்கள் என்நாவில்
வான்நோக்கி படுத்திருந்த நீ இன்றுதான் துள்ளிடும் மான் ஓடும் மண்நிலம் நோக்கி படுத்தாய் .மகிழ்ச்சி.
முகம் நிலம் நோக்க உன் நெஞ்சு தரைப்படர ,எனது அகம் மகிழ இன்று நீ குப்புறபடுத்தாய். எனக்கின்பம்.
மூக்கில் காயம் வருமே குப்புற நீ படுத்தால் பிஞ்சு
நாக்கில் பல்லடி படுமே நான் அஞ்ச நீ சிரிக்கிறாய்..
(தொடரும்..)