துளிப் பா ....!
காணமல் போன கடவுள்
========================
ஊர் கூடி தேர் இழுத்தார்கள்
தேரில் கடவுள் பவனியாக - ஜாதி
கலவரத்தால் ஊர் இரண்டு பட்டது
தேரில் இருந்த கடவுள் காணமல் போனார் ..!
தேர் மட்டும் நட்ட நாடு வீதியிலே .....!
வெயிலிலும் மழையிலும்...! -அந்த
மனிதர்களின் மனங்கலைப் போல ......!
சித்தாள்
==========
வாழ்க்கை திரிந்துப் போனதால்
மணலான அவள் - கலவையை
சுமக்கின்றாள் ...................................!
கடல் அலை
============
மார் முட்டி
பால் குடிக்கும்
குழந்தையாக
கரையை முட்டும் ........!
விலை மகள் ....!
================
அச்சிக்கு போகாத
பலர் கிறுக்கிய
காகிதம் ......................!