இந்த இரவு நேரத்தில்......

அன்பு, காதல், கொஞ்சல், கெஞ்சல் என்று
உன்னுடன் பகிர்ந்து கொள்ள
ஓடோடி வந்து

நான் பேசும் அத்தனை மொழிகளிலும்,
கொஞ்சி விளையாடும்
அத்தனை வார்த்தைகளுக்கும்,

உனது ஒரே பதில்
ம்.. .ம்..
என்றாக இருக்கும்போது

நீ ஆயிரம் வார்த்தைகள்
பேசினால் கூட கிடைக்காத
ஒரு தனி சுகம்
இந்த ஒரு ம்-ல்..........

அதுவும்
தென்றல் தாலாட்டும்
சிறு மழை துளிகள்
தெறித்து விழுந்து
கனிவு காட்டும் இந்த இரவு நேரத்தில்.........

எழுதியவர் : சாந்தி (19-Oct-13, 11:38 pm)
பார்வை : 91

மேலே