என்னங்கய்யா.! உங்களின் பேச்சுவார்த்தை ?

இக்கவிதை ஈழத்து மகன் என்னும்
என் கவிதை தொகுதியில் இருந்து....

காகிதங்களை நிரப்புவதற்காகவே,
ஒப்பந்தம் போடுவதும்..!
பொழுதுபோக்கிற்காக
பேச்சுவார்த்தை நடத்துவதும்,
நாடகமாடுவதும்..
சலுகை பஞ்சயத்தாருக்கு
சரியாகப்படலாம் நியாயப்
பஞ்சத்தாருக்கு என்னவழி?

மனித நேயத்தை மரணத்தில் தள்ளி,
இன உரிமையை இடுக்காட்டுக்கு அனுப்பி,
ஈழமக்களின் நெஞ்சுவலிக்கு,
இஞ்சி மிட்டாய் கொடுத்து,
இரக்கமற்ற இந்திய தேசத்தில்,
நானும் பிறந்தேன் என சொல்லுபோது
வெட்கம் என்னை தீயில் தள்ளி விளையாடுகிறது....!

வீரம் படைத்த மதுரை மண்ணில்
நானும் தமிழனாக பிறந்தேனென்று...
அசிங்கத்தையும்...
அவமானத்தையும்
வெட்கத்தையும்...
வேதனையையும்...
மனதில் கல்லாய்
இருத்திக்கொண்டு...

இந்த ஈழத்தேசத்து நிலைமைகண்டு...
நானும் பெற்றேன்....
இத்தமிழகத்தில்...
இச்சமுகத்தில்...
ஓர் இளைஞனாக..
அசிங்கத்தையும்...
அவமானத்தையும்
வெட்கத்தையும்...
வேதனையையும்...

விழியில் வலியோடு மதுரை வாசகம்...!

எழுதியவர் : மதுரை வாசகம் (20-Oct-13, 12:53 pm)
பார்வை : 75

மேலே