மந்தாகினியின் காதல் ...
மந்தாகினி.
ஆகா ! அழகிய பெயர்.
வானில் பிறந்தாள். வஞ்சிக் கொடியாள்.
சற்று நில்லுங்கள். வேறு எங்கோ செல்கிறீர்களே !
நான் சொல்ல வருவது ஒன்று. நீங்களோ மனதில் வேறொன்றை நினைத்து விட்டீர்களே !
மண்ணுலகில் உள்ளவரை நான் சொல்லவில்லை. விண்ணுலகில் தவழும் அந்த மந்தாகினி ஒரு நதி ஆவாள். நான் சொல்லப் போவது அவள் காதலைப் பற்றித்தான்.
ஒரு நாள் தன் மாப்பிள்ளையாகிய அரனைக் காண்பதற்கு ஸ்ரீதேவியுடன் அரி வர, அவர் வந்த வேலையை முடித்துவிட்டு, இருவரும் மந்தாகினி நதி தீரத்தில் நின்று கொண்டிருந்தனர். அமைதியாக தவழ்ந்து சென்று கொண்டிருந்த மந்தாகினியின் கண்கள் கமலக் கண்ணன் மேல் விழவும், அவர் பால் காதல் கொண்டாள்.
ஒவ்வொரு நொடியும் மாதவன் மீது தோன்றிய காதல் நினைவில் எழுந்திட சஞ்சலம் கொண்டு இடை மெலிய, நடை இழந்தாள்.
அவள் நெஞ்சில் எழுந்த விம்மல் ஒலிகள் மாதவன் ஒவ்வொரு நொடியும் கேட்ட வண்ணம் இருந்திட, ஒரு யுக்தி தோன்றியது.
சர்வ நேரமும் நாராயணா .. என்று தன் பெயர் சொல்லி திரிந்திடும் நாரதன் வரவே, முன்னோர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைக்க, பாகீரதன் செய்யும் தவத்தினைக் கேட்டு, அவரை சிவனிடம் சென்று, மந்தாகினியை கங்கை உருவில் படைத்திட வேண்டும் என்று சொல்லிடச் செய்தார்.
மாதவன் மறுபடியும் வந்தால், அவர் திரு உருவை பார்த்திட இயலாதென்று, தோன்றிட அவளும் மறுத்து நின்றாள். இருப்பினும் வேறு வழி இல்லாமல், வெறுப்புடன் சம்மதம் கொடுக்க, சினம் கொண்டு அவள் சீறிப் பாய்ந்து வந்திடும் நேரம், சிரசின் சடையை அவிழ்த்து சிவனும், தலையில் அவளை சுமந்து நிற்க, ஒரு நூல் இழையாய், சிரசின் சடையை அவிழ்த்த உடனே சீறிப் பாய்ந்து, பூமியில் தவந்து, பாற்கடலில் கலந்த பொழுது, கங்கை அவளே மந்தாகினி என்ற உண்மை உணர்ந்தாள்.
மாதவன் மீது காதல் கொண்டால் எப்படியும் அது நிறைவேறிடுமாம் !!