விடை தேடும் வினாவொன்று?

ரௌத்திரங்கள் உருவெடுக்கும்
நேரமிது,,,,
தாய்மையின் பஞ்சு மேத்தைகூட
சாத்தான்களின் சிந்தனையில்
சாஸ்த்திரமாய் மிதக்கிறது.
ஈரம் இன்னும் சாகவில்லை
இறுக்கிப்பிடித்த பயம் நடுவே,
மழலையின் முதல் மூச்சும்
முளைக்க மறுக்கிறது.
ஓடி ஒழிந்து ஒரு முளம்
இடம் பிடித்த பின்னும்,

எதற்க்காய் இந்த,,,

வனப்பானையிலே
ஆயுத அகப்பையினால்
யுத்தத்தீ மூட்டி
செத்துப்போகும் ஓர்
ரத்தச்சமையல்
சமைத்தவர்களும்
சாப்பிடவில்லை
சாப்பிடுவதற்க்கும் யாருமில்லை ..

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (20-Oct-13, 11:26 pm)
பார்வை : 49

மேலே