சத்தியங்கள்

சாத்தான்களின் கல்லறையிலா
நம் காதல் ஒப்பந்த்தம்
நிச்சயிக்கப்பட்டது ..?
உன் பிரிவைவிட நீ தந்த
ஏமாற்றங்களே அதிகம்,
நினைவிருக்கின்றதா ...எத்தனை
முறை காதலில் சத்தியம் செய்திருக்கின்றாய் ?
ஏமாற்றங்களும் இப்பிரிவும்தான்
நீ தந்த சத்தியங்களா?
உன்னை மறக்க முடியாத பொழுதுகளில்
நீயும் என்னைப்போல ...என்னை
நினைத்துகொண்டிருப்பாய் என்று
நம்புகின்ற அப்பாவித்தனம்தான்
என் காதலா?சொல்
பூஜை கனவுகளோடு
பூத்துக்கொண்ட நம் காதல்
மலர்கள் இறுதியில்
சவப்பெட்டியின் மேலா
சாத்தப்படுவது ...!!

எழுதியவர் : மலர் (12-Jan-11, 1:06 pm)
சேர்த்தது : nadarajah malar
பார்வை : 438

மேலே