பாதை மாறிய பயணங்களே

மாணவன் என்ற முகவரியுடன்
புறப்பட்டேன் கல்லூரிக்கு.....
இடைமறித்தான் நண்பன்
என் விரலிடையில் பந்தம் வைத்து....
அது வழி காட்டியது
நானும் சென்றடைந்தேன் மதுவிடம் ....
மயங்கி வீழ்வதற்குள் வந்துவிட எண்ணி
கரம் பிடிதேன் ஒரு கன்னியை ....
அவள் வழி காட்டினாள்
நான் வந்த இடமோ
காவல் நிலையம் ....
இப்படிதான் பாதை மாறியது
என் வாழ்க்கைப் பயணங்கள் ....!