நம் இந்தியா . . .
அசர வைக்கும் குணமுடையது
ஆக்கப் பூர்வமான செயலுடையது
இளைஞர்களின் பலம் பொருந்தியது
ஈடு இணையற்றது
உலக அரங்கில் முதலிடம் வகிப்பது
ஊமையோரை பேச வைக்கும் திறமையுடையது
எளிமையிலும் வெற்றி பெறுவது
ஏக்கமில்லா வாழ்க்கை நடத்த வழி காட்டுவது
ஐயமிலா நட்பினைக் கொண்டது
ஒற்றுமை எனும் சொல்லிற்கு உயிர் கொடுப்பது
ஓடும் சக்கரம் போல் முன்னேரத் துடிப்பது
ஔவை சொன்ன மொழியோடு உலா வருவது
இது தான் நம் இந்தியா . . .