ஆட்டுக்குட்டி(குழந்தைப் பாடல்)
சின்னச் சின்ன ஆட்டுக்குட்டி
சிங்கார ஆட்டுக் குட்டி.
குதித்துக் குதித்து ஓடிடும்
குட்டிப் பாப்பா ஆட்டுக்குட்டி.
முட்டி முட்டி அம்மாவை
முத்தமிட்டுக் கேட்குது..
புட்டி இன்றிப் பாலினை
கெட்டிப் பாப்பா குடிக்குது.
அம்மா பேச்சுக் கேட்குது.
அடங்கி ஒடுங்கி இருக்குது.
குழந்தைப் பாப்பா துள்ளியே
கூடி விளை யாடுது.
மே மேயினு சொல்லுது.
மேயத் தளிர் தேடுது...
வளைய வளைய அம்மாவை
வட்டமிட்டேச் சுத்துது...
கொ,பெ.பி.அய்யா.