குறைமாத ஆசை
உன் ஜடை பின்னிப்பார்க்க ஆசை
மடியில் படுத்து உன்முகம் பார்த்து பல
மழலை மொழிகள் சொல்ல ஆசை
உன் காலில் இருந்து குதிரை விட ஆசை
அருகில் படுத்து அணைத்துக்கொள்ள ஆசை.
உன் கையால் ஒருபிடியாகிலும்
வாங்கி உண்ண ஆசை - உன்
சேலைத்தலைப்பில் என் ஈரத்தலை
துவட்டிக்கொள்ள ஆசை - என்
ஊனில் தப்பாகிலும் உன் உளத்தில்
தப்பாப்பிள்ளை - அம்மா!
எனது "நடக்கும்" ஆசையைப்போல்
இதுவும் "நடவா" ஆசையா அம்மா?
என்மனம் கனவுகளை வெறுக்கிறது - காரணம்
என்னாசைகள் அதுவாவதால் - அம்மா!
எப்படியாகிலும் உன் முகம்காண
இம்முறையாகிலும் வந்துவிடு இதுவே
உன் குறைச்சிசுவின் குறையா ஆசை....