பரமனின் எல்லை பாமரன் அறிவான் ...

பற்றிக்கொள்ள அருகில்
ஒன்றும் இல்லா வேளை
படபடத்த முல்லை
கொடியினைக் கண்டு
தேரினை தந்து நற்
பேரினை பெற்ற
வள்ளல் பாரி அவன்
எல்லை தாண்டி
படரும் கொடியும்
தொற்றிக் கொள்ள
பரமன் படைத்தவை
பார்இதில் கண்டும்
பட்டற்ற வாழ்வினை
பற்றிடல் நன்றென
உரைப்பதும் நன்றோ
விருக்ஷமே ஆயினும்
வேராய் நிற்பவன்
இறைவன் அன்றோ
பரமனின் எல்லை
பாமரன் அறிவான்

எழுதியவர் : (23-Oct-13, 11:05 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 46

மேலே