526 எதை நோக்கிய பயணம் இது

பெட்டி படுக்கைகள் இன்றிதான்
தொடங்கினோம்!
சமுதாயக் குப்பைப்
பொறுக்கிகள்போல
எதையெல்லாமோ
சேர்த்துக் கொண்டு
சுமைதாங்கிகள் ஆனோம்!

சிலவற்றை வெளியே
வாந்தி செய்து
சுற்றுப்புறத்தை நாற்றமடிக்க வைத்தோம்!
சிலவற்றை நம்முள்ளேயே
ஊறப்போட்டு
நாற்றமடிக்க நின்றோம்!

சுமைகளை
இறக்கி வைக்காதவரை
நம்மைத் தூக்கத்
தயாராக இருப்பவர்கள் கூடச்
சுமைகளை இறக்கி வைத்துவிட்டோம்
என்றவுடன்
நம்மை
அடக்கம் செய்ய
ஆயத்தமாகிவிடுகின்றனர்!
இந்தப் பயணம்
வாழ்க்கையை நோக்கியதா
அல்லது
மரணத்தை நோக்கியதா?

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (23-Oct-13, 12:34 pm)
பார்வை : 320

மேலே