விமோக்ஷனம் தேடி..

செருக்குற்று கொடும்பாவம் பல புரிந்து..
சாபமுற்று ஆகினன் யான் முகம்
காட்டும் கண்ணாடியாய்..

விமோக்ஷனம் வேண்டி
கண்டனை யாம் தீர்வினையும்...

கூறினான் பரமன்..
காட்டு நிதமும் காண்பவரின் நிஜ முகத்தை..
எவ்விடியலில் காண்பவரால் நீ உடைபடவில்லையோ..
அக்கணமே வந்திடுவாய் என்னிடமே..

கண்டிட்ட விமோக்ஷனம் கை சேர
காலம் விதித்திற்ற கெடு என்னவோ அறிந்திடேன்..

முகம் காட்டி முகம் காட்டி...
விடியல் தேடுகின்றேன்..
முடிவில்லா துயருடன்
நிதம் உடை படும் என் பெயரே
மனசாட்சி..

எழுதியவர் : தமிழ் மகள் (23-Oct-13, 12:33 pm)
பார்வை : 116

மேலே