மெய்ப் பொருள்
வள்ளுவனுக்கு என்ன
லொள்ளாகச் சொல்லிப்
போய் விட்டான்!
நாற வாயோ
நல்ல வாயோ
மெய்ப் பொருள்
காண்பது அறிவாம்.
ஆனாலும்,
வீட்டு வேலை
செய்ய வந்தவளுக்கு
இத்தனை
வாய்க் கொழுப்பு
ஆகாது !
செவ்வாய் வெள்ளி
தரையைக் கழுவி
துடைக்க வேண்டும்
என்று சொன்னால்
உடம்பை மனசை
சுத்தம் செய்வோமோ
இல்லையோ
வீட்டை தவறாமல்
சுத்தம் செய்வோம்
என்று சொல்லி
சிரிக்கிறாள் .