இலட்சியப் பாதையில்
முடிந்த நிமிடங்கள்
மடிந்தாயிற்று..
படிந்த தோல்விகள்
வடிந்தாயிற்று..
பாதையில் கண்ட
பள்ளம் மேடுகள்
கடந்தாயிற்று..
கொண்ட குறிக்கோளதில்
கொண்ட முயற்சிகள்
அர்த்தமாகும் தருணம்,
இலட்சியக்குறியாய்
தொலைவிலெங்கோ
ஒளிப்பொறுத்தி வைத்தாயிற்று..
திரும்பும் திசையெலாம்
அதுவாய்..
செலவிடும் நொடியெலாம்
அதற்காய்..
பாலையில் மலர்ந்து வீசும்
பூவானது,
பூமாலையாவது சீக்கிரமே..
இலட்சியப் பாதையில்
எழுச்சியுடன் தொடங்கப்பட்ட
இப்பயணம்,
முழுவீச்சுடன் தொடர்கிறது..