சுயநலம்

கூவும் குயிலைக் கண்டேன்
மரக்கிளைகளிலே!
கரையும் காகத்தை கண்டேன்
வீட்டுச்சுவரினிலே!
குரைக்கும் நாயைக் கண்டேன்
தெருவோர சாலையிலே!
பிறந்த குழந்தையைக் கண்டேன்
குப்பை தொட்டியிலே!
ஆனால் காகிதமாம் பணத்தைக் கண்டேன்
பாதுகாப்பாய் அலமாரியிலே!
குழந்தையை விட உயர்ந்ததா காகிதம்,
இல்லை காகிதத்தின் மதிப்பு குழந்தைக்கு
இல்லையா?
உன்னுடைய வருங்கால சந்ததியினர்க்காக
சேர்க்கிறாயே மதிப்புடைய இக்காகிதத்தை,
இன்றைய சமுதாயம் பசியால் அழிவது
உன் கண்களுக்கு புலப்படவில்லையா?