சித்திரத்தாள் சித்திரவதைகள் புதுக்கவிதை

சித்திரத்(தாள்) சித்திரவதைகள் (புதுக்கவிதை)

தெரிந்துக்கொள்ள முந்திய போதினில்
விரலூன்றிய ஆதியந்தத் தடகளம்

தொட்டாங்குச்சி கிணறுகளுக்குள்
காதல்சாரா பச்சோந்தி விளையாட்டு

நேசித்த நேசங்கள்
தொலைந்திடும் தருணங்கள்
மேலும் நேசித்திடத்தானோ ???

தொடத்தொட தொட்டாச்சிணுங்கி யொன்று
கண்கள் உயர்த்த நேரியபோது
பார்வைத்தடை யுடைத்த ரோஜாவாகிறது

அதன் இதழவிழ்ந்த
புல்வெளியிலெல்லாம்
காற்றடைப்பட்ட அத்தரக வாசங்கள்,,,,

துயில் துளிர்த்தக் கட்டில்களின்மேலே
து(யி)லாபாரங்களின் ஆறுதல்கள்

ரேகையிழந்த கைகளுக்கேனோ
வருடிச்சென்ற கூந்தல் நியாபகங்கள்,,

கைத்தறிக் கட்டைகளில்
கைப்பட எழும்பிய
கடுதாசிச் சத்தங்களினாலே

விளக்கற்ற ஜன்னல்களின்று
வீதியை முறைக்கிறது

பால்நிலா விரித்த
(வி)சித்தரச் சுவர்த்தாளினிலே
சுண்ணாம்புக் கவிதைகள் இயற்றிவிட

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (24-Oct-13, 2:28 am)
பார்வை : 133

மேலே