அலை கரை

அலையில் கரையும் அவள் நினைவுகள்
மணல் அலைபோல் கரையா அவன் நினைவுகள்
அங்கு வீசும் காற்றொரு சேதி தடவும்
உன் பொட்டோடு பூவேங்கேயென - ஒரு
வினாவும் கொழுக்கும்


கன்னநீர் வந்தவள் நாவில் உவர்க்கும்
கொண்டவன் அவளைக்காணா உருவம் கண்டு
அந்த கடலும் இறைஞ்சும்- விதியே
உன்விதி என்னவென்று அவள்
மனதுள் குமிறும்..


விதுஷன்

எழுதியவர் : விதுஷன் (24-Oct-13, 12:35 am)
Tanglish : alai karai
பார்வை : 1430

மேலே