காலை வணக்கத்தோடு கவிதையின் தொடக்கம்
புலர்ந்தது பொழுது
வளர்ந்தது கவிதை
மலர்ந்தது பூக்கள்
பறந்தது மனது - அது பட்டாம் பூச்சி....!
பிள்ளை மனது
முல்லை எனது என
கொள்ளை அழகு மனம்
கொண்டதும் கவலை - அது போயி போச்சி...!
தில்லை அம்பலனிடம் தமிழ்
சொல்லை வரம் பெற்று
இல்லை முடிவென்றே தமிழ் கவி
இயற்ற தொடங்குகிறேன் - காலை வணக்கம்...!