நரை

தலை மூ டி வெளுக்க
நரை என்று சொல்ல
அதை மறைக்க
செயற்கை சாயம் தடவ
கரு கருவென்று தோற்றம் மிக
வந்ததோ வினை வேறு விதமாக
சாயம் முகத்தில் இறங்கி
சிவந்த நிறம் கரும்
படலமாகத் தோன்ற
அதிலிருந்த இரசாயனம்
உடலில் செல்ல பல விதமான
கோளாறுகள் உண்டு பண்ண
முட்டி வலி யும் முதுகு வலியும் பீடிக்க
கண்ணும் மங்கலாகத் தெரிய
அஞ்சினான் வெகுவாக
வயதான பின் மூடி
நரைப்பது இயற்கையே
தேற்றிக் கொண்டு
இயற்கையின் வழியே
செல்வது நியாயமே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (24-Oct-13, 5:07 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 617

மேலே