பருவங்கள் ஏழில் எழில் பெண்டிர்

பட்டுடையின் நுனி பற்றி
பட்டாம்பூச்சியாய் சுற்றி
திரிந்தனள் பேதையாய்..

தமையனவன் சிகம் இழுக்க
செல்லசண்டைகள் பல நடக்க
சிரித்தனள் பெதும்பையாய் ..

பருவமது வந்திடவே
பூவுமது பூத்திடவே
மலர்ந்தனள் மங்கையாய்..

காளையர்தம் கண்படவே
கன்னமதில் சினப்புகளும் தோன்றிடவே
அரசல் புரசலாய் கிசுகிசுக்கும்
அண்டை அயலாரை சட்டைசெய்யாமல்
தாயினோடு வாதங்கள் செய்தபடியே
வளர்ந்தனள் மடந்தையாய்..

பட்டங்கள் அதையும் பயின்றனள்
பகுத்தறிவு தனையும் பெற்றனள்
அகிலம் அறிந்தனள் அரிவையாய்..

கண்ணன் அவன் விரல்கோர்த்திட
அம்மி மிதித்து அருந்ததி கண்டு
கன்னியவள் ஆகினள் திருமதி
மகப்பேறும் கண்டு நல் இல்லறம்
புரிந்தனள் தெரிவையாய் ..

மக்கட்கு நல்லறிவு புகட்டி
நல்துணை தேடி
மணமுடித்து ..
தினந்தோறும் கதை உரைத்திட்டாள்
பேரன் பேத்திகளுக்கு பேரிளம்பெண்ணாய் ...

எழுதியவர் : தமிழ் மகள் (24-Oct-13, 6:11 pm)
பார்வை : 209

மேலே