வாழ்ந்திடுங்கள் இணைந்தே இறுதிவரை

காதலை சொல்லும் கவிதைகளே
எழுத்தில் வருகிறது நாள்தோறும் !
காதலரின் உள்ளத்து உணர்வுகளே
வரிசையாய் வருகிறது எந்நேரமும் !

வாழ்க்கை சமுதாயப் பார்வையென்று
வடிக்கின்றேன் கவிதைகள் பலபல !
வார்த்திடும் வரிகள் அத்தனையும்
வழங்கிடும் அறிவுரையாய் மாறுது !

எண்ணினேன் நானும் ஒருநாள்
எண்ணத்தின் பாதையை மாற்றிட !
எண்ணங்களை பதித்தால் எனக்கும்
எண்ணிக்கையும் ஏறுமே என்று !

சொன்னது பார்வையும் புள்ளியும்
சொல்வது பாவையரை அல்ல !
வயதான காலத்தால் தயங்குது
வருகின்ற வரிகளும் தள்ளாடுது !

அனுபவமும் இல்லை அடியேனுக்கு
ஆறாய்ஓட வார்த்தைகளும் அதற்கு !
ஆலோசனை வேண்டாம் உங்களுக்குள்
ஆராதிப்பவனே நானும் உள்ளங்களை !

வாசிக்கின்றேன் நானும் கவிதைகளை
சுவாசிக்கின்றேன் உங்கள் உணர்வுகளை !
அன்பெனும் காதலோடு அனைவரிடமும்
ஒன்றிடுவேன் உள்ளத்தால் வாழும்வரை !

காதலிக்கும் உள்ளங்களை வேண்டுவது
காலம் கழித்திட காதலிக்க வேண்டாமே !
வாழ்ந்திடும் எண்ணமுடன் தொடருங்கள்
வாழ்ந்திடுங்கள் இணைந்தே இறுதிவரை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Oct-13, 7:29 pm)
பார்வை : 233

மேலே