காதலர்களின் கல்லறைகள்

புதை பொருட்கள் போல
புதைக்கப்பட்டார்களா
குழிகளுக்குள்
ஒட்டு மொத்த ஆசைகளுடன்
ஒன்றும் மிச்சம் மீதியின்றி!!...
இவர்களின் கண்ணீர்களினால் தான்
புதை குழிகள் உருவாகியதா
உலகில்???...............
இவர்களின் கதறல்களின் சத்தம் தான்
பூமியைப் பிரித்துப்
பூகம்பமாய் வெடிக்கிறதா சில இடங்களில்???...
சாபம் கொடுத்தவர்கள் யார்
கல்லறையிலும் அவர்கள்
நிரந்தரமாய்த் தூங்காமல்
நிம்மதியற்று அலைந்து திரிய ???..
கல்லறையிலும் தங்கள்
காதல் பிரிக்கப்பட்டு விடுமோ என்ற
ஏக்கத்தில் தானோ ???... ...........
வாழும் போது வாழ விடாதா அரக்கர்கள் -இன்று
வாடி அழுவது எதற்காக???...
கல்லறைகளுக்குக் காலத்துக்கும்
காவியமாய் மாறிப் போன
இவர்களின் இரத்தக்
கண்ணீருக்குப் பலியாகிவிடாதீர்கள்
பாவிகளே!!........
இருக்கும் போது தான்
வாழ விடவில்லை அவர்களை
இறந்ததால்
இனிக் கல்லறைகளுக்காவது
இரக்கம் காட்டுங்கள் கயவர்களே !!!...
இந்தக் கல்லறைகளின் சாட்சி
போதாதா ????
எத்தனை எல்லைகள் போட்டாலும்
அத்தனையையும் உடைக்கும் வலிமை
காதலுக்கு உண்டென்பதை இயம்ப ???...
எட்டாத் துரத்துக்குப்
போய்விடுவார்கள்
இனி இருப்பவர்களும்
விரட்டாதீர்கள் விட்டு வையுங்கள்
மனித மிருகங்களே!!!....
கல்லாதவரையே கவிஞராக்குவது
காதல் மட்டும் தான்
ஆக மொத்தம்
கல்லறைகள் தாங்கி நிற்பது
காதலர்களை மட்டுமல்ல -நல்ல
கவிஞர்களையும் தான் !!!......
விடைபெறுகிறது எத்தனையோ உயிர்கள்
நீங்கள் விரக்தி கொள்ளும்
ஒவ்வொரு நிமிடத்திலும்!...
நியாயம் கேட்டுக் கல்லறைகள்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்யும் காலம் வரும்
வெகு விரைவில்!!!...
நாளை...........
குற்றவாளிகள் கூண்டில்
குடியேரவிருக்கும்
உங்களை நினைத்துத் தான்
துடிக்கிறது என் மனம்
அனுதினமும்!...
காதலை வாழ விடுங்கள்
காதலர்களையும் வாழ விடுங்கள்!!!..........