+காதலனின் கனவுகள்+

காதலி!
இப்போது நான் உன்னைப்பற்றி
சிந்தித்துக்கொண்டு இருப்பதைப்போல‌
நீயும் என்னைப்பற்றித்தான்
நினைத்துக்கொண்டு இருப்பாயா!

நான் உனக்காகவே
எங்கோயே காத்திருப்பது போல‌
நீயும் எனக்காவே
எங்கேயாவது காத்திருக்கிறாயோ!

நமது முதல் சந்திப்பு
எவ்வாறு நிகழும்?

திரைப்படங்கள் மாதிரி
சண்டையிலோ!
பின் சிறிது சிறிதாக
பழகி காதலிப்போமோ!

இல்லை
முதல் பார்வையிலேயே
காதல் பூக்குமோ!

காதலை
நீ முதலில் சொல்வாயா
இல்லை நானா!

நீயும் என் மொழி பேசுபவள் தானா!
உனது சாதி, மதம்
எல்லாம் ஒத்துப்போகுமா!
இல்லை போராடித்தான் வெற்றியா!

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை!
இதுவரை என் வழியிலும்
என் விழியிலும்
என் வாழ்க்கையிலும்
குறுக்கே வராத என் காதலியே!

சீக்கிரம் சந்திக்க வா!
நாமும் கொஞ்சம் காதலிக்கலாம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Oct-13, 8:51 pm)
பார்வை : 185

மேலே