காதலி காதலி

தாளாத ஓர் சுகவலி
என்னுயிர் தீண்டுமுன் மலர் விழி
கேளாத இன்னிசை மொழி
என் செவி சேருமுன் சிரிப்பொலி
மீளாத காதலில் இவன்வலி
தீர தருவாய் உன் இதழ்வழி

தீட்டாத ரவிவர்மன் ஓவியம்
உன்மேனி கம்பன் எழுதாத காவியம்
தீராதத் தேனமுதப் பாத்திரம்
உனைப் பருக வேண்டுமோ சாத்திரம்
தீண்டாத ஏழ்கடல் திரவியம்
நீயென் இதயச் சிறையில் பத்திரம்

மூட்டாத தீயுன் புன்னகை
உயிர் வாட்டும் மன்மதன் முற்றுகை
காணாதக் கட்டழகுக் காரிகை
என் வானில் உதித்தத் தாரிகை
உதிராத தேவுலக மல்லிகை
வசமானேன் இன்று நான் கள்ளிகை

எழுதியவர் : ராஜேஷ் கிருஷ்ணன் (25-Oct-13, 2:11 am)
Tanglish : mittaai magal
பார்வை : 178

மேலே