நானும் அம்மாவாகிறேன்

சருகுகளாய்
வரம் கேட்ட
காகித துண்டுகள்
கோவில் மரத்தடியில்...

படுக்கையறையில்
படிந்திருந்தது
குழந்தை கனவுகள் அகலாமல் ....

பொம்மைகளின்
கேள்வி நீள்கிறது
எங்களை ஆளும்
அரசர்கள் எப்பொழுது
வருவார்கள் ?

மாமியாரின்
வீண் சொற்கள்
மனம் முழுதும்...

கணவனின்
களங்கமில்லா மனம்
கலக்கமுடன் ஆறுதலாக...

கடவுள்
வரம் தரவில்லை
வரத்தை பெற்றுக்கொண்டேன்
காப்பாகத்திலிருந்து
நானும் அம்மாவாகிறேன் ....!

எழுதியவர் : கவி கண்மணி (25-Oct-13, 4:23 pm)
பார்வை : 823

மேலே