வேதாளம்
நீண்ட இரவுகளை
கொள்ளை கொண்டும்
வெள்ளை விடியல்களை
தள்ளிக் கொண்டும்
தூர தேசம் ...
வெகு தூர தேசம்
பயணிக்கும் என்னுடன்
நானே இருப்பதற்கான
தைரியத்துடனே,
காடு மலை , மணல் மேடு
என்று
கரைகள் தாண்டி
கடல்கள் நீந்தி
தொடர்ந்து கொண்டே
இருக்கிறேன்,
தீராத மழை
ஒன்றை
தீ சுடும் வேகத்தில்
தோளில் கிடத்திக் கொண்டு....
எதிர்ப்படும் தெரியாதோர்
சொல்லிப் போவதுண்டு,
வேதாளம் சுமந்து
போகும் மனிதன் என்று.....
தெரியாமல்
போகட்டும்
என்னை சுமந்து போகும்
வேதாளம் பற்றி.....