செல்லமே
என் செல்லமே!
பேருந்து பயணத்தில்
பக்கத்து இருக்கையில்..
வாயில் விரலோடு
பொம்மு குட்டி பாப்பா நீ!
என்னை உற்று நோக்கினாய்
பின் திரும்பி கொண்டாய்..
உன் பெயர் கேட்டேன்
சிரித்து கொண்டே எதோ சொன்னாய்..
எந்த ஊர் மொழியோ தெரியவில்லை
நீ பேசியது ஒன்றும் புரியவில்லை..
ஆனாலும் நான் ரசித்தேன்..
உன் ஒவ்வொரு அசைவையும்!
மிட்டாய் நான் வாங்கி தந்தால்
வீட்டுக்கு வருவேன் என்றாய்..
நீயாக என் மடியில் அமர்ந்தாய்..
என் புன்னகையின் முகவரியானாய்!
உன் பிஞ்சு விரல்களால்
என் கன்னம் தொட்டாய்!
பால் மணம் மாறா இதழ்களால்
முத்தம் ஒன்று பரிசளித்தாய்!
அந்த நொடியில் உணர்ந்தேன்..
ஆனந்தமாய் புகழ்ந்தேன்!
நிலவின் மகள் நீ என்று!