வறுமை போக்க
எனை ஈன்றெடுத்த உள்ளங்களோடும்....
என் உடன் பிறந்த உறவுகளோடும் ......
எனை நாடி வந்த என்னவளோடும்
தோளில் தவழ்ந்த மழலைகளோடும்
நட்பு தந்த நல் இதயங்களோடும் ..
ஓடி திரிந்த தெரு வீதிகளோடும் ...
எந்தன்
உயிர் விடுத்து...... வெறும்
உடல் எடுத்து ..........
நடை பிணமாய்
எந்தன் வறுமை போக்க ....
தொடர்கின்றேன் வெளிநாடு பயணம் ... ஆம்
ஒவ்வொரு முறையும்
என் வெளிநாடு பயணம்
இப்படிதான் இருக்கின்றது ...