ஒளியின் திருநாள்

நெருங்கி விட்டாய்..
மிக அருகில்!
நானும் தயார்..
உனை வரவேற்க!

உச்சி குளிர
எண்ணெய் குளியல் முடித்து..
மயில் தோகை நிறத்தில்
பட்டுசேலை உடுத்தி!

ஊரே மணக்க
மல்லி பூ வைத்து..
பிறை நிலவு போல்
பொட்டு வைத்து!

மீண்டும் ஒரு நாள்
தமிழ் பெண்ணாய்
எனை உணர வைக்க
இதோ வந்துவிட்டாய்..

இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க
இதயங்கள் இணைந்து நிற்க
இன்னல்கள் மறந்து விட
இனிதே ஒரு நாள்!

வான்வெளி எங்கும்
வண்ணங்கள் தெறிக்க செய்வாய்!
இருள் விலகி ஒளி பிறக்க
வரம் தந்திடுவாய்!

எழுதியவர் : மது (26-Oct-13, 3:35 pm)
பார்வை : 175

மேலே