காலம் கடந்தவை

பின்பு ஒரு நாளில்
உன்னிடம்
கூடுத்து விடலாம் என்று
முன்பு ஒரு நாளில்
உன்னக்காக வாங்கப்பட்ட
பரிசு ஒன்றை
காலம் கடந்து
காத்து வருகிறது
என் பெட்டகத்தின்
உள் அறை....

பின்பு ஒரு நாளில்
சொல்லி விடலாம் என்று
முன்பு ஒரு நாளில்
தோன்றிய காதலை
காலம் கடந்து
காத்து வருகிறது
என் இதயம் ....

எழுதியவர் : ச. மணி ராமலிங்கம் (13-Jan-11, 7:11 pm)
சேர்த்தது : Mani Ramalingam
பார்வை : 387

மேலே